May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருநங்கையருக்கும் இலவசப் பேருந்து பயணம்
விரைவில் முடிவு செய்யப்படும்
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சாதாரண கட்டண மாநகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று (மே 8) நடைமுறைக்கு வந்த நிலையில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சில இடங்களில் திருநங்கையரும் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருநங்கையரும் கட்டணமில்லாமல் பயணிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு இருந்தது. இதையடுத்து கோரிக்கை வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதற்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது:

மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Spread the love