May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருநெல்வேலி, தென்காசியில் தொடரும் மழை

திருநெல்வேலி, மே 4

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதமாகவே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் பிற்பகலில் ஒரு சில இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. திங்களன்று பல்வேறு இடங்களில் திடீர் மழை பெய்தது.

திருநெல்வேலி டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மாநகர் மற்றும் புறநகரில் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ராதாபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 34 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

தென்காசி மாவட்டத்திலும் திங்களன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 1½ மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. கயத்தாறில் மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பருத்தி, கடலை, மிளகாய் செடி உள்ளிட்டவை பயிரிடுவதற்கு இந்த மழை போதுமானதாக உள்ளதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கயத்தாறில் 36 மில்லி மீட்டரும், விளாத்திகுளத்தில் 22 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

Spread the love