திருப்பதி, மே 13
திருமலை ஏழுமலையான் கோயிலில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு தேதியை மாற்றிக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: திருமலை ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக விரைவு தரிசன டிக்கெட்டுகள் இணையதள முன்பதிவில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏப். மாதத்திற்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது கோவிட் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், நேரடியாக வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே, முன்பதிவு தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்.21ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தங்களின் தரிசன தேதிகளை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். ஊரடங்கைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இந்த முடிவு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.