August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருவண்ணாமலையில் தேசிய விவசாயிகள் தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை, டிச.24

வேளாண்மை அறிவியல் மையம் திருவண்ணாமலை சார்பில் தேசிய விவசாயிகள் தினம் நேற்று முன்தினம் கீழ்நெல்லியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நிலக்கடலை உயர் விளைச்சல் சாகுபடி, விஞ்ஞான முறையில் கால்நடை வளர்ப்பு பயிற்கள் நடத்தப்பட்டது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தியதற்காக ஆரணி வட்டம், ஆதனூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி நா.பார்த்தசாரதிக்கு விருதும் சான்றிதழும் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட அலுவலர் பி வசந்தகுமார் மற்றும் அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வேளாண்மை அறிவியல் மைய தலைவர் வே சுரேஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ் ராஜா, மார்கரெட் நாராயணன் செல்வி ஐஸ்வர்யா கால்நடை மருத்துவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் 47 பேர் கலந்து கொண்டனர்.

Spread the love