August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திருவள்ளூரில் தரமான விதை உற்பத்திக்கான விதைப்பண்ணை நடைமுறைகள்

திருவள்ளூர், ஆக. 4

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலக்காஞ்சேரி கிராமத்தில் கோ 51 நெல் விதைப்பண்ணையினை திருவள்ளூர் விதைச்சான்று உதவி இயக்குநர் நா.ஜீவராணி ஆய்வு செய்தார். அப்போது அவர் விதைப்பண்ணைகளில் வயலாய்வு மேற்கொள்ளுதல், பயிர் விலகு தூரம் பராமரித்தல், பயன்படுத்தப்பட்ட விதையின் உண்மைத் தன்மையினை சரிபார்த்தல், பிற இரக கலவன்களை அகற்றி இனத்தூய்மையை பராமரித்தல், குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேற்படி ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் அபிலாஷா, உதவி விதை அலுவலர் ஞானசேகர், உதவி வேளாண்மை அலுவலர் சிவபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love