June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தீவன பயிர் சாகுபடி தொழில் நுட்பம் குறித்த விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, ஜூன் 8

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தீவனபயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி பொட்டப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினார். திருப்புவனம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.சுந்தரமகாலிங்கம் வரவேற்புரை வழங்கி திருப்புவனம் வட்டாரத்தில் கோடையில் நெல் சாகுபடிக்கு பதிலாக பயறு வகை சாகுபடி செய்து விதை பண்ணை அமைக்க கூறினார். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். பவித்திரன் கலந்து கொண்டு தீவன பயிர் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். திருப்புவனம் உதவி வேளாண்மை அலுவலர் முத்துப்பிரியா நன்றியுரை கூறினார். திருப்புவனம் வட்டார அட்மா திட்ட மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகபிரியா ஆகியோர் பயிற்சிக்கான முன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Spread the love