August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தீவிர மழையால் முட்டைகோஸ் அழுகல்: விவசாயிகளுக்கு வேதனை

ஊட்டி, மே 21

புயல் காரணமாக பெய்த தீவிர மழையால், முட்டைகோஸ் அழுகியது.

நீலகிரி மவாட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் காரட், உருளைகிழங்கு, காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. புயல் காரணமாக நீலகிரியில் மழை தீவிரமடைந்ததால், சில இடங்களில் மலை காய்கறிகள் பாதிப்படைந்தன. இதில், குன்னூர், கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் விளைவித்த முட்டைகோஸ் அழுகியது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

Spread the love