October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

துளசி

துளசி ஒரு மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்றும் அழைக்கப்படும். வேறு பெயர்கள் துழாய் திவ்யா, விஷ்ணுபிரியா பிருந்தா, கிருஷ்ண துளசி, ஸ்ரீ துளசி, ராம துளசி, நல் துளசி கருந் துளசி, கல் துளசி, முள் துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி பல வகை உள்ளன. துளசி கோயில் பூஜைகளில் பயன்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கம் உள்ளது. மருத்துவகுணம், காலையில் எழுந்து வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களை தடுக்கும் சக்தி உண்டு. இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து விழுதை தோலில் தடவி வந்தால் சொறி, படை, சிரங்கு குணமடையும். இலை சாறு எடுத்து சிறிது தேன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள், சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்று நோய்கள் இருந்தாலும் குணமாகும். வெட்டுக்காயங்களுக்கு இலைச் சாற்றை பூசி வந்தால் குணமாகும். இலையை நீரில் ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி, இலைகளை சாறு அல்லது தேநீராக அருந்தினால் இருமல், மார்புச்சளி, வயிற்றுப்போக்கு குணமாகும். மலேரியா காய்ச்சலுக்கு பூச்சிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

நன்றி ASN சாமி ஆதனூர் 9442311505.

Spread the love