August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் இடைக்கால அறிக்கை தாக்கல்

சென்னை, மே 14

தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் முதலமைச்சரிடம் கோவிட் தொற்று நிவாரண நிதி வழங்கினார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கினார். மேலும், கோவிட் தொற்று நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.

Spread the love