August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் விநியோகம் தொடங்கியது

தூத்துக்குடி, மே 13

நாடு முழுவதும் கோவிட் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்சநீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. வியாழக்கிழமை 7 மணி அளவில் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகம் பணியை தொடங்கி வைத்தார்.

Spread the love