September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னாப்பிரிக்காவில் வாகன விற்பனை டிவிஎஸ்-இடிஜி லாகிஸ்டிக் இடையே கூட்டு

சென்னை, செப்.9

சென்னையில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தென் ஆப்ரிக்காவில், அதன் வாகன விற்பனைக்கு, இடிஜி லாகிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வ தேச வர்த்தகப் பிரிவு தலைவர், ஆர்.திலீப் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் நிறுவனத்தின், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், இந்திய துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன், அமெரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலகளவில், இரு சக்கர வாகன தயாரிப்பில், டிவிஎஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்காவில், வாகன விற்பனைக்காக, இடிஜிஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின், 30 முகமை நிறுவனங்கள் வாயிலாக, டிவிஎஸ் வாகனங்கள் அனைத்தும் தென் ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்படும். இந்த ஒப்பந்தம், தென் ஆப்ரிக்க சந்தையில், டிவிஎஸ் வலுவாக காலூன்ற உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love