May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னைகளைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, இயற்கை முறையில் அழிப்பது எப்படி? வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம்

தஞ்சாவூர், மார்ச் 10

தென்னையில் இன்றைய பெரிய பிரச்சனை சுருள் வெள்ளை ஈ, அதனை கட்டுப்படுத்த பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் சீ.சங்கர், பெ.வினித் பிரசன்னா, மா.அப்துல் கலாம், கு.அபிஷேக், அ.அரவிந்த், ப.பாலாஜி, ரா. பாலமுருகன் தங்களின் ஊரக பணி அனுபவத்தின் போது பாபநாசம் வட்டம், சருக்கை கிராமத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். வெள்ளை ஈக்களில் முட்டைகள் சுருள் வடிவத்தில் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இதன் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சி தேன் போன்ற திரவக்கழிவுகள் காணப்படும். அதனால் ஓலைகளின் மேல் கரும்பூசாணம் படர்கிறது. கரும்பூசாணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் மைதாமாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளித்து காண்பித்தனர். மேலும் 6 அடி உயரத்தில் மஞ்சள் பொறிகளை தொங்க விட வேண்டும். அந்த நிறத்தால் கவரப்பட்டு வரும் பூச்சிகள் அட்டையில் ஓட்டிக்கொள்ளும் என செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

Spread the love