May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னைக்கு வேர் ஊட்டத்தின் செயல்முறை விளக்கம்

இராமநாதபுரம், மார்ச் 16

நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் கேர்சோன் தங்கராஜ் (ADA), முனிய சாமி (BTM), மனிமோலி (ATM) ஆகியோர் தலைமையில் ச.இராமன், அ.அஜய், மு.கருணாமணி, கௌ.முகிலன், செ.முகேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து விவசாயி ராமசாமி என்பவரின் தென்னைதோப்பில் உள்ள மரங்களில் குரும்பை உதிர்தல் பிரச்சனை என தெரிவித்ததால் தென்னை டானிக்கை ஒரு தீர்வாக பயன்படுத்த பரிந்துரைத்து, அதன் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை தோப்பில் செய்து காட்டினர்.

தேங்காய் டானிக், அடர் திரவமாக மதுரையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது. 1 லிட்டர் அடர் திரவத்தில் 4 லிட்டர் தண்ணீரை சேர்க்க வேண்டும். இதை 200 மில்லி திறன் கொண்ட சிறிய பைகளில் ஊற்றி 25 மரங்களுக்கு செலுத்தலாம். மரத்தில் இருந்து 3 அடி தூரத்தில் நிலத்தை தோண்டி வெள்ளை நிறமுள்ள உயிர் வேர் களைக் கண்டறிந்து, அதன் நுனியை சாய்வாக சீவி டானிக் உள்ள பையின் அடி வரை வேரை நுழைத்து நூலால் கட்டி விட வேண்டும். இவ்வாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யும் போது, மரங்களுக்கு தேவையான போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் குரும்பை உதிர்தல் தடுக்கப்பட்டு தேங்காய் பருப்பு தடிமன், எண்ணெய் சத்து, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கும், அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனால் விவசாயிகள் பயனடைந்தனர்.

Spread the love