June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் பென்சில்முனை குறைபாட்டு அறிகுறிகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள்

சிவகங்கை, மே 4

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம், விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளா்மதி, தென்னையில் பென்சில்முனை குறைபாட்டு அறிகுறிகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள் தொழில்நுட்பங்கள் பின்வருமாறு வழங்கினார்.

அமுதக்கரைசல், பென்சில் முனை குறைபாடு என்பது தென்னையில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடாகும்.

குறைபாட்டு அறிகுறிகள்
· மரத்தின் தண்டுப்பகுதி மேல் செல்லச் செல்ல சிறுத்து காணப்படும்.
· ஓலைகள் சிறுத்து கீழே விழுந்து விடும்.
· காய்கள் அதிகம் உதிர்ந்து நாளடைவில் மரமே இறந்து விடும்,

நிவர்த்தி செய்யும் முறைகள்
எ தென்னைக்கு 5-ம் ஆண்டு முதல் மண் பரிசோதனையின்படி இரசாயண உரங்கள் (அல்லது) பொது சிபாரிசின்படி ஒரு மரத்திற்கு யூரியா -1.3 கிலோ (தழைச்சத்து 560 கிராம்), சூப்பர் பாஸ்பேட் 2.0 கிலோ (மணிச்சத்து 320 கிராம்), மியூரியேட் ஆப் பொட்டாஷ் -2.0 கிலோ (சாம்பல் சத்து 1200 கிராம்) உரங்களை இரண்டாக பிரித்து ஜீன் – ஜீலை மற்றும் டிசம்பர் –ஜனவரி மாதங்களில் இட வேண்டும்.
எ பரிந்துரைக்கப்பட்ட போது உர சிபாரிசு உரத்துடன் கூடுதலாக துத்தநாக சல்பேட் – 225 கிராம், போராக்ஸ் – 225 கிராம், இரும்பு சல்பேட் – 225 கிராம், மாங்கனீஸ் சல்பேட் – 225 கிராம், அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் மற்றும் தாமிர சல்பேட் – 225 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 ம2 வட்டபாத்தியில் ஊற்ற வேண்டும்.
எ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணூட்ட உரக்கலவை அல்லது தமிழ்நாடு அரசு தென்னை நுண்ணூட்டம் ஒரு மரத்திற்கு 1 கிலோ என்ற அளவில் இட்டும் இக்குறைபாட்டினை சரிசெய்யலாம்.
எ பென்சில் முனை குறைபாடு ஆரம்பத்திலேயே தெரிய வந்தால் உடனடியாக மேற்காணும் நிவர்த்தி முறைகளை கையாள வேண்டும்.

எ குறைபாடு அதிகரித்து மரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால், வெட்டி அப்புறப்படுத்திவிட்டு புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

Spread the love