January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னையில் ரூகோஸ் ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை

இராமநாதபுரம், ஏப்.27

வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தில் தெற்கு காட்டூர் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் தலைமை வகித்தார். துணை இயக்குனர்கள் சேக் அப்துல்லா, பாஸ்கர மணியன் முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன், வேளாண்மை அலுவலர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.

வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர்கள் இளஞ்செழியன், பாலாஜி ஆகியோர் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து கூறியதாவது : தென்னை ஓலையில் சுருள் வடிவில் 50 முதல் 65 முட்டைகளை இந்த ஈக்கள் இடுகின்றன. 4 முதல் 7 நாட்களில் குஞ்சு வெளியாகி 15 நாட்களில் சாறு உறிஞ்சிய வளர்ச்சியடைந்த ஈக்களாகின்றன. இவை காற்றில் அடுத்தடுத்த மரங்களுக்கு பரவுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 விளக்கு பொறிகளை இரவு 11.00 மணி வரை வைக்க வேண்டும். ஏக்கருக்கு 10 மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை 5 அடி உயரத்தில் வைக்கலாம். ஊடுபயிராக தட்டை பயறு, சாமந்தி, சூரியகாந்தி சாகுபடி செய்து பூச்சிகளை கவர்ந்திழுக்கலாம். ஓலைகளின்மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிப்பதாலும் அழிக்கலாம், என்றனர். உச்சிப்புளி வேளாண் உதவி இயக்குனர் கலைவாணி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரெங்கநாதன் செய்திருந்தார்.

Spread the love