சிவகங்கை, ஜூன் 13
தென்னை நார்க் கழிவுகளை விளைநிலத்தை ஆக்கிரமிக்காமல் முறையான முறையில் அகற்றப்பட வேண்டும், மக்கிய தென்னைநார்க் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்று காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன் கூறினார்.
மக்கவைக்கம் முறை :
ஒரு டன் தென்னை நார்க்கழிவை மக்க வைக்க 5 கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரேட்டஸ் காளான் வித்துக்கள் தேவை. ஜந்து அடி நீளமும் மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு இடத்தை நிழலுக்கு அடியில் தேர்ந்தெடுக்கவேண்டும் .இக்குறிப்பிட்ட இடத்தில் 100 கிலோ நார்க் கழிவை ஒரே சீராக பரப்ப வேண்டும். இந்த கழிவு படுக்கை மேல் ஒரு புட்டி பூஞ்சாண வித்துக்களை தூவிவிடவேண்டும் அதன் மேல் அடுத்த 100 கிலோ நார்க்கழிவை பரப்பி விட்டு 1 கிலோ யூரியாவை தூவ வேண்டும். பின்பு அதன் மேல் 100 கிலோ நார்க்கழிவு யூரியாஎன அடுத்துதடுத்து 10 அடுக்குகள் போட்டு எப்போதும் ஈரம் உணரும் வகையில் தண்ணீர் தெளித்து 30 நாட்கள் வரையில் தண்ணீர் தெளித்து 30 நாட்கள் வரையில் மக்க வைக்க வேண்டும். 30வது நாள் முடிவில் நார்க்கழிவு மக்கி கருமைநிறமாக மாறியிருக்கும். மக்கிய தென்னை நார்கழிவின் கொள்ளளவும் பாதியாக குறைந்து விடும். இதை உடனடியாகவோ சேமித்து வைத்தோ தேவைப்படும் போது இடலாம்.
மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் :
நார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மக்கி மண்ணின் வளத்திற்கு அடிப்படை பொருளான “மண் மக்கு” அமைய வழி செய்கிறது. மண்ணில் காற்றோட்டம் நீர் ஊடுருவும் திறன் மற்றும் நீர் பிடிப்புதிறன் ஆகியன மேம்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. மண்ணில் ஈரத்தை காத்து நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை குறைக்கிறது. மட்கிய நார்க்கழிவினை மண்ணில் சேர்ப்பதால் மண்ணின் பண்புகள் உழவு ஆகியவை மேம்படுகின்றன. இது களிமண்ணை காற்றோட்டமுள்ள தாக்குகின்றது.
பயன்படுத்தும் முறை :