May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

சிவகங்கை, மார்ச் 11

தென்னை மரங்களில் ஏற்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக செயல்விளக்கம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரம் மணல்மேடு கிராமத்தில் வெள்ளைச்சாமி என்ற விவசாயின் தென்னந்தோப்பில் வேளாண்மை உதவி இயக்குநர், ஆலோசனையின் கீழ் செயல்விளக்கம் நடத்தப்பட்டது. தென்னையில் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் மைதாமாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒலைகளின் மேல் நன்குபடுமாறு தெளிக்க வேண்டும். இப்படி முறையான மேலாண்மையை கையாண்டால் ஏற்படும் மகசூல் இழப்பைத விர்க்கலாம்.

தென்னையில் இன்றைய பெரிய பிரச்சனை சுருள் வெள்ளை ஈ இதனால் தென்னையில் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும்.

விளைச்சலில் ஏற்படும் பாதிப்பு : வெவ்வேறு முதிர்ச்சி நிலைகளில் உள்ள தேங்காய் குலைகளை ஏற்கனவே தாங்கி நிற்கும் குலைத்தண்டு விளைச்சலுக்கு கணிசமாக பங்களிக்கவில்லை என்பதால் குறைந்தபட்ச திசு சேதத்துடன் கூடிய வெள்ளைப் பூச்சி தொற்று மற்றும் காப்னோடியம் வகை கருமை நிறப்பூஞ்சையின் வளர்ச்சி ஆகியவை விளைச்சல் இழப்பை ஏற்படுகிறது. மெழுகு போன்ற வெள்ளை நிறப் பொருள் முதிர்ச்சியடைந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் சுரக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் :
ரூகோஸ் வெள்ளை ஈ பூச்சிக்களின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு 7-10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் இவற்றை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கலாம். இப்பூச்சிக்களின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால் விளக்குப் பொறிகளை இரண்டு என்றளவில் அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இலைகளின் கீழ்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம் பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிக்களை விசைத் தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீச்சி அடிப்பதன் மூலம் பூச்சிக்களின் பெருக்கத்தைகட்டுப்படுத்தலாம்.

இப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 10 கிராம் என்றளவில் மைதா மாவு பசையை தண்ணீரில் கரைத்து தென்னை இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். 5% வேப்பங்கொட்டைகரைசல் / 10% வேப்ப இலைக்கரைசல் / 0.5% வேப்பஎண்ணெய் கரைசல் / 0.3% மீன் எண்ணெய் ரெசின் சோப்புக்கரைசல் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 3-5 கிராம் / மில்லி அளவில் ஜசேரியாபியூமோஸோரோசே என்ற பூஞ்சாணத்தை ஒட்டும் திரவத்துடன் 5 கிராம் / லிட்டர் நிர்மா பவுடர் அல்லது காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும். ரூகோஸ் வெள்ளை ஈக்களை தாக்கும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து புதிதாக சுருள் வெள்ளை ஈ தாக்கப்பட்ட தோப்புகளில் விடுவதன் மூலம் இப்பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தலாம்.

இப்பூச்சிக்களுக்கு எதிராக இயற்கையிலேயே காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிக்கள் பொறி வண்டுகள் மற்றும் என்கார்சியா குளவிகள் முதிலியவற்றை பாதுகாக்க வேண்டும்.

தென்னை மரங்களை தாக்கும் வயது முதிர்ந்த பெண் வெள்ளை, ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சூழல் வடிவமைப்புக்களில் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இலைகளின் அடிப்பரப்பில் இடுகின்றன. இம்முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டே சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இந்த ஈக்கள் தென்னை மரம் தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களை தாக்குகிறது. இதனை முழுமையாக கட்டுபடுத்த தண்ணீர் வேகமாக வைத்து அந்த கிளையில் விழுந்து விடும் கருப்பூசணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசல் (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) மற்றும் பெவிஸ்டின் 2 சதம் கலந்து தெளிக்க வேண்டும் என்ற செயல் விளக்கத்தை வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் விளக்க உரையாற்றினார். இச்செயல்விளக்கத் திடலில் அட்மா திட்ட பணியாளர்கள் க.அன்பழகன், நந்தினி மற்றும் சண்முகபிரியா ஆகியோர் தென்னைகளை குறி வைக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் அழிப்பது குறித்து விவசாயிகளுக்கு விரிவான முறையில் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கரும்புசெல்வம் தென்னையில் வெள்ளை ஈ மற்றும் காண்டாமிருக வண்டு தாக்குதல் கட்டுபடுத்தும் முறைகள் சம்பந்தமான தொழில் நுட்பங்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். தென்னையில் பூச்சி மற்றும் நோய்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

Spread the love