June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரங்களுக்கு உர மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை

வேளாண்மைத்துறை அறிவுறுத்தல்
சிவகங்கை, ஏப்.20

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ யூரியா 325 கிராம் சூப்பர் தலா 500 கிராம் வேப்பம் புண்ணாக்கு 1500 கிலோ இட வேண்டும் என்று தெரிவித்தார்.

உர மேலாண்மை :

ஜந்து வயதுடைய நெட்டை தென்னைக்கு வருடம் ஒன்றுக்கு முறையே 560:320:1200 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களுடன் 50 கிலோ தொழுஉரம் இடவேண்டும்.
ஜந்து வயதுடைய வீரிய ஒட்டு தென்னைக்கு வருடம் ஒன்றுக்கு முறையே 1000:250:2000 கிராம் என்ற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களுடன் 50 கிலோ தொழுஉரம் இடவேண்டும்.

மேலே குறிப்பிட்ட உரப்பரிந்துரையில் கால், அரை மற்றும் முக்கால் பங்கினை முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்கு வயதுடைய தென்னை மரங்களுக்கு அளித்திட வேண்டும். சிபாரிசு செய்யப்படும். உரங்களை சரி சம பாகமாக பிரித்து வருடத்தில் இரண்டு முறை அதாவது ஜீன் – ஜீலை அல்லது டிசம்பர் – ஜனவரி மாதங்களில் அளித்திடலாம். உரங்களை அளிக்கும் போது வட்டப்பாத்தியில் தெளித்து மண் வெட்டியால் கொத்தி உரங்களை மண்ணோடு கலந்து விடவேண்டும். முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்மை உதிர்தல் ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு நீள வடிவிலான வெற்றுக்காய்கள் ஆகிய பிரச்சனைகள் சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரைகாய்கள் எடுக்க முடியும்.

ஜ தென்னை டானிக் :

குரும்பை கொட்டுதல் ஒல்லிக்காய் தோன்றுவதினை தடுப்பதற்கு மற்றும் மகசூலினை அதிகரித்திட ஆறு மாத இடைவெளியில் வருடத்திற்கு இரண்டு முறை மரத்திற்கு 200 மி.லி வீதம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தென்னை டானிக்கினை வேர் மூலம் செலுத்திட வேண்டும்.

நீர் மேலாண்மை :

தென்னைக்கு 6 அடி வட்டப்பாத்தியில் சுமார் 560 லிட்டர் நீரினை மார்ச் – செப்டம்பர் மாதங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறையும், அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் 8 நாட்களுக்கு ஒரு முறையும் அளித்திட வேண்டும்.

சொட்டு நீர்ப்பாசனம் :

சொட்டு நீர்ப்பாசன முறையில் மார்ச் – செப்டம்பர் மாதங்களில் மரம் ஒன்றிற்கு 80 லிட்டர் நீரும் அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் நாள் ஒன்றிற்கு 50 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.

வறட்சியிலிருந்து தென்னையினை பாதுகாத்திட :

மரத்தினை சுற்றி 5 அடி தூரத்தில் ஒரு அடி அகலம் மற்றும் 2 அடி ஆழத்தில் குழி எடுத்து சுமார் 100 உரி மட்டைகளை குழி பாகம் மேல்நோக்கி இருக்குமாறு புதைத்து மண் அணைத்திட வேண்டும். இரண்டு தென்னை மர வரிசைகளுக்கு நடுவில் மரத்திலிருந்து 3 மீ தூரத்தில் 5 அடி அகலம் மற்றும் 1.5 அடி ஆழத்தில் குழிகள் எடுத்து மட்டைகளை இட்டும் மண் அனைத்திடலாம்.

Spread the love