June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரங்களுக்கு ஊட்டமளிக்கும் “கோகோ கான்”

தென்னை மரங்களில் எளிதாக மற்ற மரங்களை காட்டிலும் பூச்சி, பூஞ்சான நோய் தாக்குதல் இருக்கும். அவற்றை பாதுகாத்திட தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை நோயியல் பிரிவு பல்வேறு வகையான நுண்ணுயிர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கலவை தான் இந்த கோகோ கான். ஒரு முறை தாய் கலவையை வாங்கி கொண்டு, குறைந்தபட்ச மாக 5 முறை மறு தயாரிப்பு செய்து பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை
ஒரு டிசம்பரில் இந்த கலவை 5 லிட்டரை, 150 லிட்டர் தண்ணீர் கலந்து, 10 கிலோ நாட்டு சர்க்கரை, 5 லிட்டர் தயிர், 500 கிராம் சாதாரண உப்பு ஆகியவற்றை போட்டு டிரம்மை துணியால் முடி வைக்க வேண்டும். தினமும் இருவேளை மர குச்சியால் கிளறி விட வேண்டும். இவ்வாறாக 5 தினங்கள் செய்தால் கலவையில் ஒரு வித மன “நெடி” வாசனை வரும். நெடி வந்தால் கரைசல் பயன்பாட்டுக்காக தயாராக உள்ளது என்று அர்த்தம்.

பயன்படுத்தும் முறை
பெருக்கம் செய்ததில் இருந்து, 2 லிட்டர் கலவையை 8 லிட்டர் தண்ணிருடன் கலந்து மரத்தின் வேர் பகுதியில் நன்றாக நனையும்படி ஊற்ற வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். இது உயிர் நுண்ணுயிர் கலவை என்பதால், மற்ற இரசாயனங்களுடன் கலக்க கூடாது.

நன்மைகள்
தென்னை வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு. நோய் தாக்குதல் குறைவு. கேரள வாடல் நோய் தாக்குல் குறிப்பாக தடுக்கப்படும்.

செலவு குறைவு
சுற்றுசூழல் பாதிப்பு இல்லை.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love