May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை மரத்தில் ட்ரோன் தொழில்நுட்பம்

நாமக்கல், மார்ச் 10

தென்னை மரம் ஒரு முக்கிய தோட்டக்கலைப் பயிராகும். தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காய் நமது அன்றாட வாழ்வின் சமையலுக்கு இன்றியமையாததாகும். இளநீர் மிகவும் ஆரோக்கியம் நிறைந்த பானமாகும். அதுமட்டுமல்லாது தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன்படும் வகையில் உள்ளன. எனவே தான் தென்னை மரம் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களைப் போலவே தென்னை மரங்களும் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கத்திற்கு உட்பட்டவையாகும். காண்டாமிருக வண்டு போன்ற அதிக இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், இலைக்கருகல் மற்றும் வாடல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பூச்சிக் கொல்லி முதலிய மருந்துகள் தேவைப்படுகின்றன.
தென்னை மரங்கள் அதிக உயரம் கொண்டவை என்பதால் சரியான நேரத்தில் மருந்துகளை தெளிப்பதற்கு ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ட்ரோனின் நன்மைகள் :
v சராசரியாக 30 முதல் 40 அடி உயரம் கொண்ட தென்னை மரத்திற்கு எளிமையாக மருந்து தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
v அதிக உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் விரைவாக மருந்துகளை தெளிப்பதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
v ஏனெனில் ட்ரோன்கள் குறுகிய காலத்தில் துரிதமாக செயல்பட்டு விரைவாக மருந்துகளை தெளிப்பதால் மருந்தின் அளவும், தெளிக்கும் நேரமும் கணிசமாக குறைகிறது.
v எனவே தான், இக்கால தென்னை மர விவசாயிகள் அதிகளவில் ட்ரோன்களை விரும்புகின்றனர்.
v மற்ற பயிர்களைக் காட்டிலும், தென்னை மரம் அதிக உயரம் கொண்டவை என்பதால் அவற்றின் பயன்பாட்டிற்கு ட்ரோன்கள் பெரிதும் உதவுகின்றன.

மேலும் விவரங்களுக்கு முனைவர் க.சுசீந்திரன் (உதவி பேராசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகம்) மற்றும் கெ.பாரதி (இளங்கலை வேளாண்மை மாணவர்) சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம். கைபேசி : 70105 80683, மின்னஞ்சல் : bharathi17092001@gmail.com

Spread the love