August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்னை விவசாயிகள் வியாபாரியாக மாறும் வழி

ஒவ்வொரு விவசாயியும், விலைவாசி குறித்து அறிந்தவரே. அவரது பொருளை தெரிந்தோ தெரியாமலோ பிறரிடம் கொடுத்து பணம் பெற்றிருப்பார். சில நேரம் பொருளை முன்னதாகத் தந்து பிறகு அடுத்த நாள் அதன் தொகையை மண்டி வைத்துள்ள நபர்களிடம் பெறுவார்.

இந்த பரிவர்த்தனை முறை மிக எளிதானது. அன்றாடம் நிகழும் இந்த வரவுக்கு ஆதார அங்காடி வியாபாரத்தில் பல நேரம் விவசாயிகள் அதிக எரிச்சலும், பொறாமையும், கொண்டு கொந்தளித்துக் கூறுவது, எனது தேங்காயை ரூ.10க்கு வாங்கி அதை நுகர்வோரிடம் ரூ.20க்கு விற்கிறார்கள். எனக்கு உரிய கிடைக்காமல் வருந்துகிறேன். நித்தம் பாடுபட்டு எனக்கு பணமே வரவில்லை என்பது. இது முற்றிலும் அறியாமையால் கூறும் வாதம் தான்.

ஆம், எந்த ஒரு பொருளுக்கும் மொத்தக் கொள்முதல் விலை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அதாவது ஒரு நாற்காலி வாங்கினால் ரூ.800 ஆகுமென்றால், மொத்தமாக 100 நாற்காலிகள் வாங்கும் போது தலா ரூ.600 ஆகும். இதற்காக எந்த தயாரிப்பாளரும் புலம்புவதில்லை. உயிரற்ற எந்த பொருளுக்கும் அடக்கவிலை என்று ஒன்றும் விற்பனை விலை என்றும் உண்டு. விவசாயத்தில் மட்டும் தான் அடக்கவிலை கிடையாது. ஆனால், உற்பத்தி செலவுக்கும் மதிப்பளித்து, விற்பனை விலை பொருத்தி பொருளை விநியோகம் செய்வது தான் விவசாயிகளுக்கு உதவும் வழி. சில நேரங்களில் அதிக பரப்பில் சாகுபடி செய்பவர், விலையைக் குறைத்து, சிறு உற்பத்தியாளர்களை முட்டு வழி செலவுத் தொகையைக்கூட பெறவிடுவதில்லை. இதற்கு ஒரே வழி, சிறு விவசாயிகள் ஒன்று சேர்வதும், அங்காடிக்கு சிலரை உருமாற்றம் செய்து வியாபாரியாக இவர்களே மாறி சில்லரை விற்பனையையும் தரமாக முன்வந்து செய்தால் தான் முடியும். எந்த தருணமும் நல்ல காசு பார்க்கலாம். குழுவாக சேர்ந்து உற்பத்தி செய்ய திட்டம் வகுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அதிலும் மதிப்புக் கூட்டும் தொழிலையும் சேர்ந்து துவக்கி பயிர் பல வித உணவு தயாரிப்புக்கு இடுபொருளாக மாற்றினால் நிச்சயம் நம் காட்டில் மழை தான்.

வணிகராக மாறும் எண்ணம் உள்ளவர்கள் மேலும் விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : டாக்டர்.பா.இளங்கோவன், வேளாண்மை இணைஇயக்குநர், காஞ்சிபுரம்

Spread the love