January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தென்மேற்கு பருவமழை ஜூன் 1ல் கேரளத்தில் துவங்கும்

புது தில்லி, மே 7

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சக செயலர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என அவர் கூறினார்.

இது தொடர்பாக சுட்டுரையில் ராஜீவன் வெளியிட்ட பதிவில், 2021ம் ஆண்டுக்கான பருவமழை வழக்கமான காலகட்டமான ஜூன் தொடக்கத்தில் கேரளத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன் கணிப்பு தான். இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 15ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும். அதைத் தொடர்ந்து 31ம் தேதி எந்த அளவுக்குப் பருவ மழை அளவு இருக்கும் என்பது தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மழைப் பொழிவில் 75 சதவீதம் தென்மேற்குப் பருவமழை மூலம் தான் கிடைக்கிறது. இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழை பொழியும் என்று தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக சராசரியாக 98 சதவீத மழை பெய்து வருகிறது. சில ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்குக் கூடுதல் அல்லது குறைவாக மழைப் பொழிவு இருந்துள்ளது.

Spread the love