June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேங்காய் விலை உயர்வு

நாமக்கல், ஜூன் 8

தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவம்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 4,767 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.15க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.29க்கும், சராசரியாக ரூ.‌23.89க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,10,826க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வார விலையை ஒப்பிடுகையில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.25ம், குறைந்தபட்ச விலையில் ரூ.2.79ம் உயர்ந்திருந்தது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Spread the love