பாரம்பரிய உணவு திருவிழா
பாரம்பரிய உணவு திருவிழா வரும் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை
திருத்துறைப்பூண்டி
ஏ.ஆர்.வி. திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது.
ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய முன்னோடி உழவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திருமண அரங்கத்தில் 2022, மே 21, 22 தேதிகளில் நெல் திருவிழா நடைபெற உள்ளது. தேசிய நெல் திருவிழாவில் உழவர்களின் பேரணி, கருத்தரங்கம், பாரம்பரிய விதை நெல் வழங்கல், பாரம்பரிய உணவு திருவிழா, கண்காட்சி, கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரு தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும், சத்து மிகுந்த சிறு தானிய உணவு வகைகளை இன்றைய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய நெல் பாதுகாவலர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த பாரம்பரிய உணவு திருவிழா இவ்வாண்டும் 22.05.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. திருமண அரங்கில் நடைபெற உள்ளது.
உணவு திருவிழாவில் பங்கு கொள்ள விரும்பும் நபர்கள் பாரம்பரிய உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து எடுத்து வந்து கண்காட்சியில் வைக்கலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பு :
• அவித்த உணவுகள், சமைத்த உணவுகள், பலகாரங்கள்
• ஒவ்வொரு வகை உணவிற்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
• பாரம்பரிய உணவு வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது.
• செய்முறை விளக்கத்தை அட்டையில் எழுதி வைக்க வேண்டும்
. • போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு :
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்,
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் – 614 713 .
+91 98437 49663,