June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேனியில் பயிர்களுக்கான சமச்சீர் உரங்கள் விழிப்புணர்வு முகாம்

தேனி, ஜூன் 21

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான பயிர்களுக்கான சமச்சீர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் மகேஸ்வரன் உழவியல் முறைகள் மூலம் மண் வளத்தை மேம்படுத்துவது பற்றி கூறி வரவேற்புரை வழங்கினார்.

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சேர்மன் முனைவர் பெ.பச்சைமால், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக கூறினார்.

காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு உடல் மற்றும் மனதை மேம்படுத்தி கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் அருண்ராஜ், விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை, மண் பரிசோதனை முறைகள், பயிர்களுக்கான சமசீர் முறையில் உரங்களை வழங்குதல் தொடர்பாக கூறினார். மேலும் உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக கூறினார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சபரிநாதன் பல்வேறு தொலைபேசி செயலியை பயன்படுத்தி மண்ணின் தன்மையை அறிதல் தொடர்பான தொழில்நுட்ப உரையாற்றினார்.

வேளாண் அறிவியல் மையத்தின் மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் ராஜாராமன் பயிர்களுக்காக உருவாக்கப்பட்ட நனோ யூரியா, நுண்ணூட்ட உரங்ககள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகச்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சி.சபரிநாதன் நன்றி கூறினார்.

Spread the love