June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்

தேனி, ஜூன் 9

தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்கள் விளைபொருளான தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு நல்ல விலை கிடைக்கவும், குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் இருக்கவும், அரசின் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் 22,500 ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சுமார் 3,600 லட்சம் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தேங்காய் வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை குறைந்துள்ளது. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக, தேங்காய் கொப்பரைகளின் விலை வெளி சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகின்றது.

எனவே விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்திலும் அரசின் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்திட உத்திரவிடப்பட்டு தேனி மாவட்டத்திற்கு 2,400 மெ.டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசினால் 2022ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலையான அரவைக் கொப்பரைக்கு கிலோ ரூ.105.90 என்ற விலையில் தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Spread the love