தேனி, மார்ச் 12
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ம.இரம்யா சிவசெல்வி வரவேற்புரையாற்றி வேளாண் அறிவியல் மையத்தில் முக்கிய செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தலைவர் முனைவர் பெ.பச்சைமால் தலைமையுரையாற்றினார். கேரளாவில் உள்ள ஹைரேன்ஜ் தேனீ வளர்ப்பு நிறுவனத்தின் இயக்கநர் டி.கே.ராஜு மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் இராஜேந்திரபிரசாத், தேனீக்களின் வகைகள், வாழ்கைப் பருவம், வளர்ப்புக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யும் முறை, வளர்ப்புக்கு ஏற்ற பூ ரகங்கள், தேவைப்படும் உபகரணங்கள், தேனீக்களின் எதிரிகள் மற்றும் தாக்கும் நோய்கள், கோடை மற்றும் குளிர் காலங்களில் பராமரிப்பு முறைகள், சுத்தத் தேனை அறியும் முறை, ராணித் தேனீக்களை உற்பத்தி செய்யும் முறை, செயற்கை முறையில் உணவளித்தல் மற்றும் தேனில் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்கள், தரச்சான்றிதல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பயிற்சியளிக்கப்பட்டன.