June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை செயல் விளக்கத்தில் கல்லூரி மாணவிகள்

திருச்சி, ஏப்.7

திருச்சி மாவட்டம், மேலப்பட்டியில் உளுந்து விவசாயி வயலில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை, தெளிக்கும் அளவு மற்றும் அதன் பயன்களை விரிவாக எடுத்துரைத்தனர். தேமோர் கரைசல் பயிருக்கு தெளிப்பதால்
பூ பூக்கும் தன்மையை அதிகரிக்கும். தேமோர் கரைசலில் சைட்டோசைம் இருப்பதினால், இது தாவரத்தின் வளர்ச்சி செல்களை தூண்டி வளர்ச்சியை துரிதப்படுத்தும். நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

பூக்கள் வரும் தருணத்தில் பயிர்களின் மேல் தெளிப்பதின் மூலம் ‘பூக்கள் உதிராமல் நிலைக்கும். தேமோர் கரைசலை பூக்கும் பருவத்தில் தெளிப்பதினால், தெளிக்கப்படும் பயிர்களின் விளைபொருட்கள் நன்கு திரட்சியாக, நல்ல பளபளப்புடனும், சுவையுடனும் இருக்கும்.

Spread the love