கோவை, மே 8
கோவை தேயிலை ஏல மையத்தில், 4 லட்சத்து, 95 ஆயிரத்து, 876 கிலோ தேயிலை ஏலம் போனது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை தேயிலை ஏல மையத்தில், வாரந்தோறும் இணையதளம் வாயிலாக, தேயிலை ஏலம் நடக்கும். இவ்வாரம் நடந்த தேயிலைத்தூள் ஏலத்துக்கு, 3 லட்சத்து, 24 ஆயிரத்து, 223 கிலோ வந்தது. அதில், இரண்டு லட்சத்து, 73 ஆயிரத்து 196 கிலோ தேயிலை தூள் ஏலம் போனது. இவ்வார தேயிலைத்தூளின் சராசரி ஏல மதிப்பு ஒரு கிலோவுக்கு, ரூ.121.45 காசுகளாக இருந்தது. இலைரக தேயிலை, இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 798 கிலோ ஏலத்துக்கு வந்தது. இதில், இரண்டு லட்சத்து, 22 ஆயிரத்து, 680 கிலோ ஏலம் போனது. இலைரக தேயிலையின் சராசரி ஏல மதிப்பு ஒரு கிலோவுக்கு, ரூ.123.21 காசுகளாக இருந்தது. இத்தகவலை கோவை தேயிலை ஏல மைய செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.