May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேற்றான்கொட்டை

தேற்றான்கொட்டை பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை நிலையினையும் உருண்டையான விதையும் உடைய குறுமரம். தமிழகத்தில் மலைக்காடுகளிலும் ஆங்காங்கே காணப்படும். தேற்றான்கொட்டை கலங்கிய நீரில் சிறிது உழைப்பதால் நீர் தெளிந்து விடும். நீரை தெரிவித்தாலும் உடலை ஏற்றுவதாலும் இது தேற்றான்கொட்டை எனப் பெயர் பெற்றுள்ளது. இதன் பழம், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பழம் வாந்தி உண்டாகும், சீதபேதியை கட்டுப்படுத்தும், விதை உடல் தேற்றுதல், உடல் பலம் மிகுத்தல், பசி தூண்டுதல், சளி அகற்றுதல் ஆக உறுப்புக்களின் அயர்ச்சியைத் அழித்தல் ஆகிய மருத்துவ குணங்கள் உடையது. பழச்சதையை உலர்த்தி வைத்துக்கொண்டு அரை கிராம் வரை கொடுத்துவர சீதபேதி கட்டுப்படுத்தும். தேற்றான் பழம் தூய்மையான துணியில் நனைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு தேவையான போது நீரில் இட்டு கலக்கி வடிகட்டி சளி மிகுதியால் துன்பப்படும் சிறு குழந்தைகளுக்கு கொடுக்க சளி வாந்தியாகி நோய் குணப்படும். தேத்தான் கொட்டையை முற்றிலும் அரைத்து மோரில் கலந்து குடிக்க நாள்பட்ட பேதி நிற்கும். பாலில் கலந்து கொடுக்க நீர் எரிச்சல் நீர்க்கடுப்பு வெள்ளை மதுமேகம் குணமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love