தேள் கொடுக்கு சொரசொரப்பான இலைகளையும் தேள் கொடுக்கு போன்ற பூங்கொத்து இணையும் வெளிறிய நீல நிற மலர்களையும் உடைய சிறுசெடி. தன்னிச்சையாக வளரக்கூடியது. இலைகள் மருத்துவ பயன் உடையவை. தாதுக்கள் அழுகாமல் தடுக்கும் குணம் உடையது. இலைச் சாற்றை பூசி வர சொறி, சிரங்கு, புண் முதலியவை ஆறும். இலையை அரைத்து பூசி வர முகப்பரு ஆறாத புண்கள் ஆகியவை ஆறும். இலையை கசக்கி தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி கடுப்பு தணியும். இலைச்சாறு நல்லெண்ணெய் சமன் கலந்து பதமுறக் காய்ச்சி வடித்து, சிறு தேள் கொடுக்கு தைலம் காதுகளில் விட்டு வர காதடைப்பு தீரும். தலையிலும், உடம்பிலும் தடவி வைத்திருந்து குளித்து வர உடல் வெப்பம் தணியும். காது, கண், மூக்கு ஆகியவற்றில் நீர் வடிதல் தீரும். உடம்பிலுள்ள நமைச்சல், சிரங்கு, கரப்பான் முதலியவை தீரும்.
தேள் கொடுக்கு செடி

Spread the love