August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தேவைப்படும் நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை தாராளமாக பகிரவும்: பியூஸ் கோயல் வலியுறுத்தல்

புது தில்லி, மே 13

தேவைப்படும் நாடுகளுக்கு, கோவிட் தடுப்பூசிகளை தாராளமாக பகிரும்படி, உலக நாடுகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியுள்ளார். உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் குறித்த கூட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கொவிட் தொற்றை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. முக்கிய பொருட்களின் கொள்முதல், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அரசு அதிகரித்துள்ளது மற்றும் கண்காணித்து வருகிறது. திரவ ஆக்ஸிஜன் கொண்டு செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே இயக்குகிறது. தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது. எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், இந்த உலகளாவிய சவாலை சமாளித்து, வெளிவருவோம். மீளும் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஒரு பகுதியாக இருக்க இந்தியா விரும்புகிறது.

இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள, வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை அம்சங்கள் (டிரிப்ஸ்) தள்ளுபடியை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், விரைவான ஒருமித்த கருத்தை உருவாக்குதல், தொழில்நுட்ப பரிமாற்றம், மூலப் பொருட்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். தடுப்பூசி காப்புரிமை வி­யத்தில், அமெரிக்கா குறைந்த அளவிலான ஆதரவை அளித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதுதான் இப்போதைய தேவை. தேவைப்படும் நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசியை, உலக நாடுகள் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.

Spread the love