January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மாபெரும் லோன் மேளா: ஆட்சியர் தகவல்

விருதுநகர், டிச.23

விருதுநகர் மாவட்டத்தில் 104/1 மதுரை ரோட்டில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் உட்பட 38 கிளைகள் மற்றும் 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அனைத்து வகை கடன் வழங்;கும் மேளா 27.12.2021 முதல் 30.12.2021 வரை விடுமுறை நாட்கள் நீங்;கலாக நடைபெற உள்ளது.

அச்சமயம் வங்;கி வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாய பெருங்;குடி மக்கள் கடன் பெற தேவையான ஆவணங்களை வழங்;கி கடன் பெற்று பயனடையலாம்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்;கி தலைமையலுலவகம் மற்றும் கிளைகள் மூலமாக வழங்;கும் கடன்கள் வீட்டு வசதி கடன்கள் வீட்டு அடமான கடன்கள் பணிபுரியும் மகளிர் கடன்கள் சுய உதவிக்குழு கடன்கள் பண்ணைசாராக் கடன்கள், முதலீட்டு கடன்கள், மாற்றுதிறனாளி கடன்கள், குறு சிறு நடுத்தர தொழில் கடன்கள், சிறு வணிக கடன்கள், மத்திய காலக்கடன்கள், மகளிர் தொழில் முனைவோர் கடன்கள், முத்ரா கடன்கள், சம்பள கடன்கள், டாப்செட்கோ கடன்கள், டாம்கோ கடன்கள், நகைகடன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்கும் கடன்கள், பயிர் கடன்கள்(கேசிசி) மாற்றுதிறனாளி கடன்கள், மத்தியகாலக் கடன்கள், தானிய ஈட்டுக்கடன்கள் சுய உதவிக்குழு கடன்கள், நகை கடன்கள்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுகிய கால பயிர்க்கடன்கள் பெற நிலத்தின் பட்டா சிட்டா அடங்;கல் ஆதார் கார்டு நகல் மற்றும் பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம் போன்றவைகளுடன் நேரில் விண்ணப்பித்து பயிர்கடன் பெறலாம். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் கடன் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Spread the love