June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொடர்மழையால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு

தேனி, மே 21

பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மேலும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 152 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 130.65 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 130.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 777 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4908 மி.கனஅடியாக உள்ளது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 67.03 அடியாக உள்ளது. வரத்து 11 கனஅடி, திறப்பு 72 கனஅடி, நீர் இருப்பு 5904 மி.கனஅடி. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.35 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு இல்லை. இருப்பு 164.69 மி.கனஅடி. 126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடி, இருப்பு 169.63 மி.கனஅடி.

Spread the love