May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை, மே 13

வால்பாறையில், செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ததால், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்கிறது. இடியுடன் மழை பெய்வதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். மழை தொடர்வதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை, 2.71 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 45 கனஅடி தண்ணீர் வரத்து இருந்து. அணையிலிருந்து வினாடிக்கு, 40 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

Spread the love