May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொடர் மழையால் புளி விளைச்சல் சரிவு

சிவகங்கை, மே 11

திருப்புவனம் வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் புளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானூர், கல்லூரணி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய், குளம், சாலை ஓரம் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. வருடம்தோறும் மே, ஜூனில் புளி விளைச்சல் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக மழை பெய்ததால் புளிய மரங்களில் போதிய காய்ப்பு இல்லை. விளைந்த புளியங்காய்களும் பூச்சியாகி போனதால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நன்கு விளைந்த மரத்தில் ஆண்டிற்கு சுமார் 25 கிலோ புளியம்பழங்கள் கிடைக்கும் நிலையில், இந்தாண்டு 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு பழம் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love