தொட்டால் சினிங்கி நீர்வளம் உள்ள இடங்களில் தரையோடு படர்ந்து வளரும், முள்ளுள்ள செடி. உணர்வுள்ள கூட்டிலைகளையும், இளம் சிவப்பு மலர்களையும், வளைந்த தட்டையான காய்களையும் உடையது. இலைகளை போட்டால் உடனே வாடி தளர்ந்துவிடும். சிறிது நேரம் கழித்து பழைய நிலையை அடையும். இதன் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலைகள் உடல் தேற்றி, உரமாக்கி, வேர் காமம் பெருக்கும். இலையை அரைத்து பற்று போட விரைவில் மூட்டுவலி, வீக்கம் ஆகியவை தீரும். இலைச்சாற்றுடன் குதிரை சிறுநீர் சமன் கலந்து ஓரிரு துளி கண்களில் விட்டு வர கண் குறைபாடுகள் நீங்கும். 50 கிராம் இலையில் அரை லிட்டர் நீர் விட்டு அரை மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லி ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீர் கற்களை வெளியேற்றும். சிறுநீர் தொடர்பான நோய்களை குணப்படுத்தும். 40 கிராம் வேரை சிதைத்து 250 மில்லி நீரிலிட்டு 100 மில்லியன் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி 15 மில்லி ஆக நாள்தோறும் 3 வேளை பருகி வர சிறுநீர் கோளாறுகள் அகன்று சிறுநீர் கற்கள் இலை, வேர் ஆகியவற்றை பொடி சம அளவு கலந்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர எல்லா வகை மூலமும் தீரும்.
தொட்டால் சினிங்கி

Spread the love