மும்பை, ஏப்.29
தற்போதைக்கு, தொலைபேசி கட்டண உயர்வுக்கு வாய்ப்பிருப்பதாக கருதவில்லை என கிரிசில் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கிரிசில் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால், அவை கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் தொலைபேசி உபயோகிப்பாளர்கள் சந்தையில், ஜியோவின் பங்களிப்பு, 33.7 சதமாக உள்ளது. ஏர்டெல் பங்களிப்பு, 33.6 சதமாக உள்ளது. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் இடையே இப்படி மிகக் கடுமையான போட்டி நிலவுவதால், இந்த இரண்டு நிறுவனங்களுமே கட்டணத்தை உயர்த்தி, பாதிப்பை சந்திக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக புதிய சேவைகளை வழங்குவதில் அதிக போட்டி இருக்கும் என்றும், ஆனால், கடந்த, 2019ம் ஆண்டுக்கு முன் இருந்தது போன்ற கட்டண யுத்தம் இப்போது நடைபெறாது என்றும் கிரிசில் தெரிவித்துள்ளது.