October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொழிற் பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் நேரடிசேர்க்கை : ஆட்சியர் தகவல்

கடலூர், அக்.12

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெறுவது. தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள சில இடங்களில் சேர்வதற்கு 30.10.2021 வரை நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறகேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விபரங்கள் அறிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி மிதிவண்டி புத்தகம் காலணி சீருடை வரை படக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடுசெய்து தரப்படும். இந்த இணையதள வழியிலான நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர்ரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love