January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொழில்துறை மற்றும் அரசாங்கம் இடையே முழுமையான நம்பிக்கை தேவை: நிதியமைச்சர்

புது தில்லி, ஏப்.21

கோவிட் தொற்று பரவலுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, தொழில்துறை மற்றும் அரசாங்கத்துக்கு இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவிட் தொற்று நோய்களின் 2வது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அரசுக்கும் தொழில்துறையினருக்கும் இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், அது மேலும் பரஸ்பரம் வளர்ச்சியை தக்கவைப்பதாக இருக்க வேண்டும் என்றார்.

அத்துடன் வளர்ச்சிப் போக்கில் இடையூறுகள் இருக்கக் கூடாது. அப்படி இருப்பின், அது அவநம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும். இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்தார்.

Spread the love