May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொழில்நுட்ப விவசாயம் தரும் புதிய வாய்ப்புகள்

கடந்த சில ஆண்டுகளாக புதிய தகவல் தொழில்நுட்பங்கள் (New Information Technogies) அடிப்படையில் வேளாண் துறையில் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்கம் முயற்சிகள் நாடு முழுவதும் பெருகி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி துல்லியமாக பயிர்களுக்கு நீர் பாசனம் செய்யும் முயற்சிகள் வாயிலாக மிகவும் குறைந்த அளவு நீர் வளங்களை கொண்டு சாகுபடி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றிகரமாக பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

இத்தகைய சூழலில் IFFCO கிசான் திட்டத்தின் வாயிலாக இணையத்தின் வாயிலாக தற்போதைய 2ஜி அலைவரிசையைக் கொண்டு இயக்கப்படும் புதிய பாசன முறை ஒரு செயலி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மண்ணின் தன்மை, நீர் அளவு, இயற்கையில் காற்றின் ஈரப்பதம், சாகுபடி செய்யப்படும் பயிரின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தேவைப்படும் நீரின் அளவு ஆகியவை முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த புதிய சாகுபடி குறை விவசாயிகளுடன் IFFCO நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட பயிர் ஒப்பந்தத்தில் IFFCO நிறுவனம் இந்த புதிய வேளாண் கட்டமைப்பில் விவசாயிகளின் நிலத்தில் முதலீடு செய்யும் கரும்பு பயிரின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து இடுபொருட்கள் வானிலை தகவல்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு, அறுவடைக்கு பிந்தைய பணிகளை கூட நிறுவனமே விவசாயிகளுக்கு செய்து தரும் தற்போது சக்கரை ஆலைகள் அதிகப்படியான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை நிலுவையில் வைத்துள்ள சூழலில் விவசாயிகள் மற்றும் நிறுவனத்திற்கு பயன்தரும் வகையில் இயற்கை முறையில் வெல்லத்தை உற்பத்தி செய்து அதனை பெரு நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யும் நடைமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 140 டன்கள் வரை கரும்பு கிடைக்கும் நிலையில் அதனை 13-14 டன்கள் வரை இயற்கை வெல்லமாக உற்பத்தி செய்து சந்தையின் தேவைக்கேற்ப கிலோவிற்கு 60 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சூழலில் கிலோவிற்கு ரூ.60 என்ற அளவில் விற்பனை செய்தால் கூட அனைத்து செலவினங்கள் போக வருடத்திற்கு ரூ.4.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் லாபம் என்பதுடன் தற்போது சக்கரை ஆலைகளில் வாங்கப்படும் கரும்பு விலையை காட்டிலும் மிகவும் அதிகம். இவ்வாறு தொழில்நுட்ப சார்ந்த விவசாயம் வாயிலாக மிகவும் குறைந்த அளவு வேளாண் இடு பொருட்களை பயன்படுத்தி நம்மால் அதிகளவு உற்பத்தி திறன் பெருக்கத்தை ஏற்படச் செய்வதுடன் நமது விவசாயிகள் அதிகளவு லாபம் பெறவும் முடியும். குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிகளவு பயிரை (More crop per drop) உற்பத்தி செய்வதுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யவும் (Doubling farm income) முடியும்
.

கட்டுரை
: முனைவர் தி.ராஜ் பிரவின்,
இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை)
மற்றும்
ஒருங்கிணைப்பாளர்,
விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love