August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தொழில் நிறுவனங்களோடு இந்திய போட்டியியல் ஆணையம் துடிப்புடன் பணியாற்ற வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு

புது தில்லி, மே 21

இந்திய போட்டியியல் ஆணையத்தின் 12-வது நிறுவன தின நிகழ்ச்சியை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்ததாவது: வேகமாக மாறிவரும் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் சந்தைக¼ளாடு நட்பாக இருந்து, அதே சமயம் போட்டித் தன்மையை கண்காணிக்கும் அமைப்பின் தேவை குறித்து எடுத்துரைத்தார்.

பெருந்தொற்றுக்கு பிறகு நிறுவனங்களின் புத்தாக்கத்தில் உள்ள சவால்கள் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், தொழில் நிறுவனங்க¼ளாடு இந்திய போட்டியியல் ஆணையம் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களின் சட்டபூர்வ கோரிக்கைகளுக்கு பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதிய இந்தியாவின் விரிவடைந்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பேசிய அமைச்சர், நியாயமான சந்தை செயல்பாடுகள் வளர்வதற்காக வேகமாகவும், பெரிய அளவிலும் தொலைநோக்குடனும் பணியாற்றுமாறு ஆணையத்தை கேட்டுக்கொண்டார். இந்திய போட்டியியல் ஆணையத்தின் போட்டி சட்டங்கள் மற்றும் கொள்கை குறித்த சஞ்சிகையையும், தமிழ், வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆணையத்தின் புத்தகங்களையும் திருமதி நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியின் போது வெளியிட்டார்.

Spread the love