June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி பயிற்சி

சிவகங்கை, ஏப்.6

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி, தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி பயிற்சி என்ற தலைப்பில் 5.4.2022 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. தோட்டக்கலை அலுவலர் இ.ராஜேஸஷ்வரி தலைமையில் நடைபெற்றது.

கல்லல் தோட்டக்கலை அலுவலர் இ.ராஜேஸ்வரி, தோட்டக்கலைத் துறையில் தற்போது தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் புதிதாக இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கூறினார். காய்கறி நாற்றுகள் மற்றும் பழ மரகன்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினார். கல்லல் உதவி தோட்டக்கலை அலுவலர் சு.பாஸ்கர் கூறுகையில் மா அடர் நடவில் பூச்சிகள், பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் பிஞ்சுகள் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு பாசலோன் 35, சி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும் படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்.

தெளிக்கும் காலம் : மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தேவையானதொழில் நுட்பங்களை கேட்டறிந்தனர். கல்லல், உதவி தொழில் நுட்ப மேலாளர் நா.குருதாஸ் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனை பற்றி விவசயிகளிடம் தெரிவித்து நன்றி கூறினார்.

Spread the love