May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான் முட்டை வடிவ இலைகளை உடைய, வேலிகளில் படரும் சுற்று கொடி பணிவுடன் கூடிய முட்டை வடிவ விதைகள் உடையது. கழிப்பாலை என்றும் நஞ்சு முறிச்சான் கொடி என்றும் வழங்கப்படும். வேர், இலை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வாந்தி உண்டாகும். வியர்வை பெருக்குதல், கோழையகற்றுதல் ஆகிய குணங்களை உடையது. இலையை உலர்த்திப் பொடித்து அரை கிராம் வெந்நீரில் நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வியர்வை பெருகும். சளியை போக்கும், சீதக் கழிச்சல் ஆகியவை தீரும். 150 மில்லி இலை சூரணம் தேனில் கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் தீரும். இலையை நன்கு அரைத்து எலுமிச்சை அளவு உள்ளுக்குக் கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்ட வாந்தியாகி நஞ்சு முறியும். மயக்க நிலையில் இருந்தால் வேர்ப்பொடியை நசியமிடலாம். கொடி முழுமையாக உலர்த்திப் பொடித்து அதன் எடைக்குச் மிளகுப்பொடி கலந்து 5 கிராம் காலை, மாலை மோரில் கொடுத்துவர பாதரசம், ரசக்கற்பூரம், வீரம் போன்ற பாஷாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு கொடுத்து வரவேண்டும். மேற்கண்ட பொடியை அரை கிராம் அளவாக நாள்தோறும் மூன்று வேளையாக நீடித்து குடித்து வர மேக வாயு பிடிப்பு தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love