June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு அங்கக வேளாண்மை

தஞ்சாவூர், ஜூன் 14

அங்கக வேளாண் விளைபொருட்களுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளதால் அங்கக வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெற்று பயனடைய விதைச்சான்று உதவி இயக்குனர், தஞ்சாவூர் முகமது பரூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
தற்பொழுது இலாபகரமான விவசாயம் செய்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும் ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் செலவினம் அதிகமாகி வருவதாலும் விவசாயிகளிடையே சாகுபடி செய்யும் ஆர்வம் குறைந்து வருகிறது. தற்போது அங்கக வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் விவசாயிகள் அங்கக விவசாயிகள் பெற்று பயனடையலாம். இத்தகைய சூழ்நிலையில் குறைந்த இடுபொருட்கள் செலவில் நிறைந்த வருமானமும், மதிப்பு கூட்டு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கும் இயற்கை வழி வேளாண்மை ஒரு வரப்பிரசாதமாகும்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து அங்கக வேளாண்மையிணை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கக வேளாண்மையில் மண் வளம் காக்கப்படுவதுடன் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு கூடுதல் லாபம் பெற முடியும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நினைப்பவர்களும் அங்கக பொருட்களை விற்பனை செய்பவர்கள் தமிழக அரசு விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மற்றும் மத்திய அரசின் அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தனி நபராகவோ குழுவாகவோ பதிவு செய்துகொண்டு சான்றினை பெறலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு அங்ககச் சான்று பெற ரூ.2700, பெரு விவசாயிகளுக்கு ரூ.3200, குழுவிற்கு ரூ.7200 மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.9400 பதிவு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம் எனக் கேட்டுக் கொண்டார்.

Spread the love