October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பாண்டின் 2வது காலாண்டில் பயணிகள் ரயில் வருவாய் அதிகரிப்பு

புது தில்லி, அக்.12

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் பயணிகள் ரயில் வருவாய் 113 சதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முடங்கிய ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் 96 சதவீத ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் சிறப்பு ரயிலாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் ரயில் பயணிகள் கட்டணம் மூலமான வருவாய் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரயில்வேக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), முதல் காலாண்டை விட 113 சதவீதம் அதிகமான வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ரூ.4,921 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 2-வது காலாண்டில் ரூ.10,513 கோடி வருவாய் பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love