October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பாண்டில் ஆயுள் காப்பீட்டு பிரீமிய வருவாய் 5.8 சதம் வளர்ச்சி: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை

மும்பை, அக்.11

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் 5.8 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து கேர் ரேட்டிங் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் 5.8 சதம் வளர்ச்சி கண்டு ரூ.1,31,982 கோடியை எட்டியது. ஆயுள் காப்பீட்டு சந்தையில் முதலிடத்தில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் 3.3 சதம் குறைந்த நிலையில், தனியார் துறை நிறுவனங்களின் வசூல் 27.7 சதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ளது.

அதன் அடிப்படையில், எல்ஐசி நிறுவனத்தின் முதல் அரையாண்டு புதிய பிரீமியம் வசூல் ரூ.88,018 கோடியிலிருந்து ரூ.85,112.6 கோடியாக சரிந்தது. தனியார் துறை நிறுவனங்களின் புதிய பிரீமிய வசூல் ரூ.46,869.3 கோடியாக இருந்தது. தனிநபர் ஒற்றை பிரீமியம் 33.7 சதம் அதிகரித்து ரூ.7,280.3 கோடியாகவும், அதேநேரம் தனிநபர் ஒற்றை சாரா பிரீமியம் 31.7 சதம் அதிகரித்து ரூ.20,404.1 கோடியாகவும் இருந்தன. குரூப் ஒற்றை பிரீமியம் வசூல் 18.7 சதவீதம் அதிகரித்து ரூ.15,824.9 கோடியாக இருந்தது. குரூப் ஒற்றை சாரா பிரீமியம் 2 மடங்கு அதிகரித்து ரூ.127.9 கோடியாகவும், குரூப் ஆண்டு புதுப்பிப்பு பிரீமியம் வருவாய் 35.8 சதம் அதிகரித்து ரூ.3,232.1 கோடியாகவும் இருந்தன. ஆயுள் காப்பீட்டு துறையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 64.5 சத பங்களிப்புடன் எல்ஐசி முதலிடத்தில் உள்ளது. தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு 35.5 சதமாக உள்ளதாக அந்த கேர் ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love