August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பாண்டில் இந்தியாவில் எரிவாயு உற்பத்தி சரிவு

SLQ

மும்பை, ஏப்.21

நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் 5 சதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 8 சதமும் சரிந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 32.17 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், மார்ச் 31, 2021 உடன் முடிந்த நிதியாண்டில் 30.5 மில்லிடன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது எனப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கோவிட் பொது முடக்கம் காரணமாக நாட்டின் உற்பத்தி அதிகளவிலான பாதிப்பு எதிர்கொண்டது. இதில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தப்பிக்கவில்லை.

2021ஆம் நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் 20.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து 2 சதவீத சரிவையும், ஆயில் இந்தியா லிமிடெட் 5.4 சதவீத சரிவையும், வேதாந்தா க்ரைன் 12.6 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதேபோல் இயற்கை எரிவாயு உற்பத்தி 2020ம் நிதியாண்டில் 31.18 பிசிஎம் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கோவிட் பாதிப்பு நிறைந்த 2021ம் நிதியாண்டில் 28.67 பில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் வாயு மட்டுமே உற்பத்தி செய்து 8 சத சரிவைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

Spread the love