July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பாண்டில் ரியல் எஸ்டேட்டில் நிறுவன முதலீடு ரூ.37,500 கோடியாக உயரும்: கோலியர்ஸ் தகவல்

புது தில்லி, ஜூலை 22

நடப்பாண்டில், ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடு, 4 சதம் அதிகரித்து, ரூ.37,500 கோடியாக உயரும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, கோலியர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, முதலீட்டாளர்கள், கவர்ச்சிகரமான மதிப்பீடு கொண்டவற்றில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில், இத்துறையில், நிறுவன முதலீடு ரூ.36 ஆயிரம் கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில், இத்துறையில் முதல் ஆறு மாதங்களில் முதலீடு, ரூ.21,750 கோடியாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு அதிகமாகும். நடப்பு ஆண்டில் இதுவரை செய்யப்பட்ட மொத்த முதலீட்டில், 35 சதம், அலுவலக கட்டடங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் பிரிவில் ரூ.5,813 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம், வீடுகள் பிரிவில், 4 சதம் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love