August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பாண்டில் ரூ.17 ஆயிரம் கோடி வருமான வரி ரீபண்ட் வழங்கியுள்ளது

புது தில்லி, மே 13

நடப்பு நிதியாண்டில் இதுவரை, ரூ.17,061 கோடி அளவுக்கு, ரீபண்டு வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில், வருமான வரி செலுத்தியவர்களில், 13 லட்சம் பேர்களுக்கு, ரூ.17,061 கோடி ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது. இதில், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில், 12.71 லட்சம் பேர்களுக்கு, ரூ.5,575 ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கார்ப்பரேட் வரிக்கான ரீபண்டாக, 29 ஆயிரத்து, 592 பேர்களுக்கு, ரூ.11,486 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, மே 10 தேதி வரையிலான காலத்தில், இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரீபண்டு எந்த நிதியாண்டு கணக்கு தாக்கலுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Spread the love